7 வருட ஏக்கம். என்ட்ரி கொடுத்த சிஎஸ்கே. தோனி குறித்து நெகிழ்ந்த புஜாரா!

என்ன தான் புஜாரா டெஸ்ட் உலகின் அசைக்கு முடியாத சக்தியாக வலம் வந்தாலும் அவருக்கு லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணி கூட இடம் அளிக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒருநாள் போட்டிகளில் அவர் வெறும் ஐந்தே போட்டிகளிலெயே ஆடியுள்ளார் என்பது முகத்தில் அறையும் பேருண்மை. டி20 போட்டிகளில் சொல்லவே வேண்டாம். அதிலும் அதிரடிக்குப் பஞ்சமில்லாத ஐபிஎல் தொடரில் சுத்தம்.

கொல்கத்தா, ஆர்சிபி, பஞ்சாப் என மூன்று வெவ்வேறு அணிகளில் 2008ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை புஜாரா ஐபிஎல்லில் களமிறங்கியிருக்கிறார். அன்றிலிருந்து அவர் ஆறு முறை ஏலப்பட்டியலில் தன்னுடைய பெயரைப் பதிவுசெய்தும் கேட்பாரின்றி ஒவ்வொரு முறையும் விலை போகாமல் இருந்தார்ஒரு கட்டத்திற்கு விரக்தியின் உச்சிக்குச் சென்ற புஜாரா, தன்னை ஏலத்தில் எடுக்குமாறு வாய் விட்டும் கேட்டுவிட்டார். தனக்கு அனைத்துவிதமான கிரிக்கெட் விளையாட வேண்டும் ஆசை இருக்கிறது; ஆனால் என்னை யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று மிகவும் நொந்து கூறினார்.

இச்சூழலில் தான் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பாராவிதமாக புஜாராவை சிஎஸ்கே 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. 7 வருடமாக ஐபிஎல்லுக்குள் நுழைய முடியாமல் ஏங்கி தவித்த புஜாராவை ஏலம் எடுத்தவுடன் அனைத்து அணியினரும் கைதட்டி வரவேற்றார்கள். ஏலம் எடுத்து ஐபிஎல்லுக்கு கம்பேக் கொடுத்த சிஎஸ்கேவுக்கு நன்றி தெரிவித்து தனது செல்ல மகளுடன் புஜாரா வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் அவர், “ஐபிஎல்லுக்குள் மீண்டும் நுழைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதிலும் சிஎஸ்கேவுக்காக மஞ்சள் நிற ஜெர்சியில் ஆடப்போவது என்பது கற்பனைக்கு எட்டாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. தோனி கேப்டன்சியின் கீழ் மீண்டும் விளையாடப் போகிறேன். அவர் கேப்டனாக இருக்கும்போது தான் நான் இந்திய அணிக்காக அறிமுகமானேன். அவர் தலைமையின் கீழ் விளையாடிய நினைவுகள் இப்போதும் நிழலாடுகின்றன.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை டெஸ்ட் மனநிலையிலிருந்து டி20 போட்டி மனநிலைக்கு மாற வேண்டும். ஐபிஎல்லில் விரைவாகவே கியரை மாற்ற வேண்டும். அதற்காக மனதளவிலும் டெக்னிக்கலாகவும் என்னைத் தயார்படுத்துவேன். இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்என்றார்.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts