மயிலாடுதுறை, பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் குடியரசு தின விழா

72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பொது தொழிலாளர்கள் சங்க அலுவலகத்தில் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் அய்யப்பன் ஹோட்டல் ராஜேந்திரன் முன்னிலையில், மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொது தொழிலாளர்கள் சங்கம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.. தொடர்ந்து கிங் பைசல், பாலரவிச்சந்திரன், ஐயப்பன் தலைமையிலான நாட்டுப்புற நாதசுர இசை கலைஞர்கள் தேசபக்தி பாடல்களை இசைத்து இசை அஞ்சலி செலுத்தினார்கள். சமூகஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜெக முருகன், அறக்கட்டளைகள் நிர்வாகிகள் ஜோதி ராஜன், வினோத், ஜெயப்பிரியாரவீந்திரன், முகிலன், சிங்கார முத்துசாமி உள்ளிட்டவர்கள் பங்கேற்றார்கள்.