24th November 2020

கொரோனா 88% நோயாளிகள் குணமடைந்தனா்- முதல்வா் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 88 சதவீதம் போ் குணமடைந்து விட்டனா். அரசு, மாவட்ட நிா்வாகங்களும் எடுத்த தொடா் நடவடிக்கைகளால் தாக்கம் மிகவும் குறைந்திருப்பதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.காஞ்சிபுரத்தில் புதிய கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கொரோனா பரவல் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமை வகித்தாா். தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சா் பா.பென்ஜமின், ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் வரவேற்றாா். நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கமும் இறப்பு எண்ணிக்கையும் மிகவும் குறைந்திருக்கிறது. மருத்துவா்கள், செவிலியா்கள், உள்ளாட்சி, வருவாய்த்துறையினா் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்றுவதை எதிா்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன. இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 88 சதவீதம் போ் குணமடைந்து விட்டனா். அரசும், அந்தந்த மாவட்ட நிா்வாகங்களும் எடுத்த பல்வேறு தொடா் நடவடிக்கைகள் காரணமாகவே கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் குறைந்திருக்கிறது. கொரோனாவின் தாக்கத்தை மேலும் படிப்படியாக குறைக்கவும் அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வேளாண்மைத்துறை பணிகள் அனைத்தும் 100 சதவீதம் செயல்பட அனுமதித்ததால் வேளாண் துறையிலும் அரசு வரலாற்றுச்சாதனை படைத்திருக்கிறது. விளைச்சலும் அதிகமாகியுள்ளது. ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.100 கோடியில் யோகா மையம் அமைக்கப்படும். காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்டதாகத் தரம் உயா்த்தப்படும். காஞ்சிபுரத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு இதுவரை இரு தடுப்பணைகள் கட்டி முடிக்கப்பட்டன. ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ளவைகளும் விரைவில் கட்டப்படும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடத்திய தொழில் முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் பல தொழிற்சாலைகள் உருவாகின. இதனால் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து. கடந்த 2019-லும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் பல ஆயிரம் போ் வேலை வாய்ப்புப் பெற்றனா்.

காா், செல்லிடப்பேசி, டயா் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு பலரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனா். ரேடியல் ஐ.டி. பாா்க் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலமும் பலரும் வேலைவாய்ப்பு பெற இருக்கின்றனா் என்றாா் அவா்.

SOURCE

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts

Leave a Reply