மயிலாடுதுறை சீர்காழி இளந்தோப்பு ஊராட்சியில் மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது


புரவி புயலால் வந்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் வெள்ளத்தால் சூழ்ந்த நிலையில் அணைக்கரையிலிருந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட முதலை ஒன்று சீர்காழி அருகே இளந்தோப்பு ஊராட்சி சோழன்கோட்டம் கிராமத்தில் உள்ள ராஜன் வாய்க்காலில் கரை ஒதுங்கியது. அதனை பார்த்த அப்பகுதி கிராம மக்கள் முதலை இருப்பதாக சீர்காழி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வனத்துறை அலுவலர் குமரேசன் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் சோழன்கோட்டை பகுதிக்கு சென்று வலை வைத்து பிடித்தனர். 2 வயதுடைய 5 அடி நீளமும் 1 ஆதி அகலமும் கொண்ட முதலையை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டு அணைக்கரை ஆற்றில் விட்டனர்.