25th November 2020

திருச்சி மாநகரில் உள்ள குடிசை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து

திருச்சி மாநகரில் உள்ள செந்தண்ணீர்புரம் அருகே சங்கிலியண்டபுரம் ராமமூர்த்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகளை கொண்ட பகுதி உள்ளது. இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள் ஆவார்கள். இந்த சூழலில் நேற்று இரவு தங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணி அளவில் அங்குள்ள குடிசை வீடுகளில் தீ பற்றி எரிந்தது.

இதனையடுத்து, உடனடியாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் மளமளவென பற்றி எரிந்த தீ, நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளில் பரவியதால் அந்தப்பகுதியே எரிந்து சாம்பலானது.

இந்த நிலையில் இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட காரணம் என்ன என்ற முதல்கட்ட விசாரணையில், ஒரு குடிசையில் சமையல் பயண்பட்டிற்கு வைத்திருந்த சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட தீ, பக்கத்தில் உள்ள வீடுகளிலுக்கும் பரவியதால் இந்த பெரும் விபத்து நடந்ததாக தெரிய வருகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஆனாலும், அதிர்ஷ்டவசமாக இந்த பெரும் விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts