அரசு கலை கல்லுாரி சேர்க்கை 20 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழக உயர் கல்வி துறையின் கீழ், 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் இயங்குகின்றன. அவற்றில், 92 ஆயிரம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. அவற்றில் சேர, இரண்டு லட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பர்.அதேபோல், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்குகின்றன. இவற்றில், 16 ஆயிரத்து, 890 இடங்கள் உள்ளன. இவற்றில் சேர, 30 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிப்பர். இவற்றில் சேர, ஒன்றுக்கு மேற்பட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, கட்டணம் செலுத்துவர். மாணவர்கள் நேரில் செல்வதை தவிர்க்க, ஆன்லைனில் விண்ணப்பிக்க, அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கு, www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற, இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, www.tngptc.in மற்றும், www.tngptc.com என்ற இணையதளங் களில் விண்ணப்பிக்கலாம். வரும், 20ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.இதுகுறித்த விபரங்கள் பெற, 044 – 2235 1014 மற்றும் 044 – 2235 1015 என்ற, தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.