18th October 2021

டிராஃபிக் ராமசாமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

சமூக செயற்பாட்டாளர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த டிராஃபிக் ராமசாமிக்கு கடந்த 4ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 87 வயதாகும் டிராஃபிக் ராமசாமி சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து களமாடி வருகிறார்.

இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பொதுநலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வந்தார். இவர் சட்டமன்ற தேர்தலுக்காக சோழிங்கநல்லூரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அதனால் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முன்னதாக வீடு, அலுவலகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை மோசமானதால் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ஐசியூவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டிராஃபிக் ராமசாமிக்கு கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page