இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை கொண்டு வருவேன் – அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் !


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை கொண்டு வருவேன் என்று அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் வாக்குறுதி அளித்துள்ளார்.
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கோமல் அன்பரசன்,மயிலாடுதுறை நகர பகுதிகளான கூறைநாடு,ஆரயோகியநாதபுரம்,தூக்கணாங்குளம் மாமரத்துமேடை,நல்லமுத்தான் தெரு,பூக்கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவருக்கு பொதுமக்களும் இளைஞர்களும் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களிடம் வேட்பாளர் கோமல் அன்பரசன் பேசுகையில்,மயிலாடுதுறை பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்பேட்டை கொண்டு வருவேன்.இதைப்போல் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான பல திட்டங்கள் கொண்டு வரப்படும்.மயிலாடுதுறை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது.ஆகையால் இளைஞர்கள் எழுச்சியுடன் ஒன்று சேர வேண்டும்.மயிலாடுதுறையில் புதிய மாற்றத்தை உருவாக்கிட வேண்டும்.மயிலாடுதுறையில் புதிய மாற்றத்தை உருவாக்கிட அமமுக வை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார்.அப்போது அமமுக,தேமுதிக,எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்,தொண்டர்கள் உடனிருந்தனர்.