25th February 2021

விவசாயிகள் நிதியுதவி முறைகேட்டைக் கண்டறிந்தது அதிமுக அரசுதான்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நடைபெற்ற விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடுகளுக்கு மத்திய அரசின் புதிய வழிமுறைதான் காரணம்; இந்த முறைகேட்டை அதிமுக அரசுதான் முதலில் கண்டறிந்தது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 87 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

நதிநீர்ப் பிரச்னை: மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதிநீர்ப் பிரச்னை குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வராதபடி கர்நாடகம் தடுப்பணை கட்டி தடுத்தால் நீதிமன்றம் செல்வோம். இந்த விஷயத்தில் நமது உரிமையை எப்போதும் விட்டுத் தரமாட்டோம். விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேட்டை அதிமுக அரசுதான் கண்டறிந்தது. இந்த முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே 41 லட்சம் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற்று வந்தனர். கடந்த 4 மாதங்களில் இது 46 லட்சமாக உயர்ந்தது. குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் எப்படிப் பயன்பெற முடியும் என்ற சந்தேகம் மாநில வேளாண் துறைக்கு ஏற்பட்டதால், உயரதிகாரிகள் விசாரணை நடத்தியதில், முறைகேடு நடைபெற்றது தெரிய வந்தது. முறைகேடு நடைபெற்ற இடங்களில் ஆய்வு செய்து பணத்தைத் திரும்பப் பெற்று வருகிறோம். கடந்த ஆண்டு இறுதியில் ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டையைக் கொண்டு விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்ததால்தான் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. இதில் தொடர்புடைய 18 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். 81 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 34 துறை அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தவறான தகவல்: தமிழகத்தில் நிகழ்ந்த கொலைகள் குறித்த எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்.

சட்டப்பேரவையில் 2019}20 காவல் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட புத்தகத்தில் 159}வது பக்கத்தில் அட்டவணைப்படுத்தி உள்ளோம். இதில் ஆதாயக் கொலைகள் 81, கொடுங்குற்றங்கள் என 1,488 கொலைச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்விரண்டையும் கூட்டினால் கொலைகளின் மொத்த எண்ணிக்கை 1,569 மட்டுமே. இதைப் படித்துப் பாக்காமலேயே 81 கொலைகளை மறைத்துவிட்டதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பயன்பெற்ற, தற்போது மூடப்பட்டுள்ள டான்காப் ஆலையை உணவுப் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

8 வழிச் சாலைத் திட்டத்தால் பலன் கிடைக்கும்:

 

SOURCE

More News

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts

ஆன்டிராய்டு செல்லிடப்பேசியில் இனி கூகுள் வரைபடத்தின் ‘டார்க் மோட்’ வசதி

admin See author's posts

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்தது மோதி அமைச்சரவை

admin See author's posts

Leave a Reply