14th April 2021

அதிமுகவை தோற்கடிக்க வேண்டும்: நடிகர் கருணாஸ் அறிவிப்பு

 நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அதிமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை. மாறாக 234 தொகுதிகளிலும் அதிமுக எதிர்ப்பு, பிரசாரத்தை சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்வோம். அதிமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் கள நிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். இடஒதுக்கீட்டால் ஏற்படும் இழப்பு, எதிர்கால மாணவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து சமூக வலைதளங்களில் அதிகம் பரப்ப இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளை படைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மயிலாடுதுறை தொகுதியில் உங்கள் ஓட்டு யாருக்கு?
  • Add your answer

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts