26th November 2020

நாகப்பட்டினம் மாவட்டம் இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு முகாம்

Air Warrior Drill Team of Indian Air Force display their skills during Air Force day parade at the Hindon air base on the out skirts of New Delhi, India, Saturday, Oct. 8, 2016. Air Force Day is celebrated to mark the day the Indian air force was officially established in 1932. Apart from defending Indian air space, the air force also delivers humanitarian aid and disaster relief material during natural calamities. (AP Photo/Manish Swarup)

நாகப்பட்டினம் மாவட்டம் இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான (குரூப் எக்ஸ் பணி – கல்வி பயிற்றுநர்) தேர்வு முகாம், 17.10.2019 மற்றும் 21.10.2019 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை உள் அரங்கில் நடைபெற உள்ளது.

தகுதி வாய்ந்தவர்கள் நேரில் கலந்து கொள்ளலாம். 17.10.2019 மற்றும் 21.10.2019 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது. 17.10.2019 அன்று தமிழ்நாட்டினை சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வில் கலந்துகொள்ள 19.07.1995 முதல் 01.07.2000-க்குள் பிறந்த பட்டப்படிப்பு முடித்தவர்களும், முதுநிலை பட்டம் பெற்றோர் 19.07.1992 முதல் 01.07.2000-க்குள் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். திருமணமானவராக இருந்தால் 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பி.ஏ., பட்டம் அல்லது இயற்பியல் / உளவியல் / வேதியியல் / கணிதம் / ஐடி / கணினி அறிவியல் / புள்ளியியல் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பாடத்துடன் பி.எஸ்.சி அல்லது பிசிஏ படிப்பில் 50 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்ஏ ஆங்கிலம் / உளவியல் அல்லது எம்.எஸ்சி., கணிதம் / இயற்பியல் / புள்ளியியல் / கணினி அறிவியல் ஐடி அல்லது எம்சிஏ படிப்பில் குறைந்தது 50 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்றும் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வில் கலந்துகொள்வோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு செல்ல வேண்டும். அசல் சான்றிதழ்கள் கல்லூரியில் இருந்தால் அதுகுறித்து பள்ளி கல்லூரி முதல்வரின் சான்றிதழுடன் கூடிய சுயகையொப்பம் இட்ட நகல் சான்றிதழ்கள் எடுத்துச் செல்லலாம்.

மேலும் விவரங்கள் அறிய www.airmenselection.cdac.in என்ற இணைய தளம் மூலமாகவும் அல்லது தொலைபெசி எண்.044-22390561 அல்லது 044-22390561 மூலமாகவும் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அணுகியும் (04365-253042) விவரங்கள் கேட்டு பெறலாம்.

Leave a Reply