அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபருக்கு மயிலாடுதுறை பள்ளி மாணவர்கள் பூங்கொத்து ஏந்தி வாழ்த்து


மயிலாடுதுறை உள்ள தனியார் பள்ளியில் (அழகு ஜோதி அகாடமி) குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் விபத்தில்லாத மற்றும் மாசு இல்லா சூழலை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி குழந்தைகள் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பிடன் ஆகியோரின் உருவ சிலைகள் அருகில் நின்று, பள்ளி மாணவர்கள் தங்கள் கரங்களில் பூங்கொத்து ஏந்தி இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.

