மயிலாடுதுறை, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலய நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான திருஞானசம்பந்தர் திருமண மண்டபத்தை தனியாருக்கு விற்கப்பட்ட ஆலய நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட குழு உறுப்பினர் சிம்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்கடையூரில் புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான ஆலயத்திற்கு தெற்கு தேரோடும் சாலையின் ஓரத்தில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திய திருஞானசம்பந்தர் திருமண மண்பத்தை தனியாருக்கு விற்ற ஆலய நிர்வாகத்தை கண்டித்தும், மண்டபத்தை இடித்து 25 அடி ஆழம் ஆபத்தான பள்ளத்தை ஒன்றரை ஏக்கர் முழுவதுமாக தோண்டி மணல் எடுக்கும் தனியார் நிறுவனத்தை கண்டித்து அபிராமி அம்மன் ஆலயம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் ) கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் அபிராமி அம்மன் ஆலய சொத்தை வேண்டப்பட்ட தனியாருக்கு விற்கக் கூடாது எனவும், பள்ளிக்கூடம் குடியிருப்பு வீடுகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் 25 அடி ஆழம் தோண்டும் தனியாரை அனுமதிக்க கூடாது எனவும், குறைந்த வாடகையில் ஏழை-எளிய தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்திவந்த குருஞானசம்பந்தர் திருமண மண்டபத்தை மீண்டும் செயல்படுத்தவும், கோயில் இடத்தை குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற அனுமதி வழங்கவும், மத்திய மாநில அரசின் வீடு கட்டும் பயனாளிகளுக்கு தடையில்லா சான்று உதவியின்றி வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன போராட்டம் நடைபெற்றது.

மேலும், இதில் கிளைச்செயலாளர்கள் ஜீவானந்தம், பரமசிவம், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், கலைச்செல்வி, வெண்ணிலா, அமுல் காஸ்ட்ரோ கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.

 

செய்தி: இரா.யோகுதாஸ்

More News

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts