தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்கும் அன்பு அறக்கட்டளை சப்தமில்லாமல் சாதித்துவருகிறது.


நாகை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக படிக்கும் காலத்திலிருந்தே தனிமாவட்ட கோரிக்கையை முன்வைத்தவர்களில் ஒருவரும் மூத்த ஊடகவியலாளரும், அன்பு அறக்கட்டளையின் நிறுவனத்தலைவருமான கொ.அன்புகுமார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதோடு, அன்பு அறக்கட்டளையின் சேவைப்பணிகள் குறித்து விரிவாக விவரித்தார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா. லலிதாவும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.