பற்றி எரிந்த வீடுகள்… விதிக்கு வந்த மக்கள்… 10 குடும்பத்திற்கும் உடனடியாக உதவி செய்த மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை.


விழுப்புரம் அருகே தும்பூர் பகுதியில் ஆற்றங்கரையோரம் வசித்துவந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட இருளர் இனமக்களின் குடிசைவீடுகள் மின்கசிவு காரணமாக பற்றி எரிந்து சாம்பலானது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். எந்தவித அடிப்படை உரிமைகளும் கிடைக்காமல் இருந்த இருளர் இனமக்கள் உணவுக்கும் உடைக்கும் தவிப்பது அறிந்து, மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார், சம்பந்தபட்ட அனைத்து குடும்பத்திற்கும் தலா ஒருமூட்டை அரிசி வழங்கி உதவி செய்திருக்கிறார்.