ஆதரவற்றோரை அரவணைக்கும் அன்பு அறக்கட்டளை – மயிலாடுதுறையில் வேரூன்றி விருட்சமாய் வளர்ந்து நிற்கும் அறக்கட்டளைக்கு குவியும் பாராட்டுகள்.


மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் அன்பு அறக்கட்டளை ஆதரவற்றோருக்கான பயணத்தில் தனித்துவம் பெற்றிருக்கிறது.
சென்னை டிடிகே சாலையில் இயங்கிவரும் அன்பாலயா ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருக்கும் சுமார் 70 பேருக்கும் இன்று மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
அன்பு அறக்கட்டளையின் நிறுவனத்தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் காப்பகத்தில் தங்கியிருக்கும் அதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கி, அவர்களின் தனிமையின் விரக்தியை போக்குவதற்கு முயற்சித்தார்.
மயிலாடுதுறையை சேர்ந்த சரோஜா ராமதாஸ் என்பவரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது மகன் முரளி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அன்பு அறக்கட்டளையை தொடர்புகொண்டு இந்த அறத்தொண்டை செய்வதற்கு ஊக்கமளித்தால், அதரவற்ற 70 முதியோருக்கு இன்று அறுசுவை உணவு கிடைத்தது.
தொடர்ந்து நலத்திட்டங்களின் மூலம் மக்களின் மனதை தொட்டுக்கொண்டிருக்கிறது மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை.