மயிலாடுதுறை,அன்பு அறக்கட்டளை சார்பில் தாய் தந்தையை இழந்து தனிமையில் வாடிய குழந்தைகளுக்கு நிவாரண உதவி


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோருக்கு மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் திருஞானசம்பந்தர் தெருவில் வசித்துவரும் ஆதரவற்ற சபரீசன், ரட்சிகா என்ற அண்ணன் தங்கைக்கு, புதுத்துணி, இனிப்பு, காலணி மற்றும் பட்டாசு வாங்கிக்கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார். சிறுவயதிலேயே தாயையும் தந்தையையும் இழந்துவாடும் அந்த குழந்தைகள் அவர்களது உறவினர் வீட்டில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களது கல்வி செலவையும் ஏற்பதாக அறிவித்திருக்கிறார் அன்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கொ.அன்புகுமார். தாய் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய மனம் இருந்தும் முடியாமல் தவிக்கும் அந்த ஊர்பொதுமக்கள், அன்பு அறக்கட்டளையின் சேவை அறிந்து தொடர்ந்து வாழ்த்து மழை தூவுகின்றனர். இதே போல் ஒருங்கிணைந்த மயிலாடுதுறை மாவட்ட கிராமிய கலைஞர்களுக்கும் அன்பு அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நலிவடைந்த கிராமிய கலைஞர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்தவித நிகழ்ச்சியிலும் பங்குகொள்ள முடியாமல் முடங்கிப்போனதால் அவர்களது வாழ்வாதாரம் அடியோடு முடங்கி கிடக்கிறது. அவர்களின் துயர் துடைக்கும் வகையில் அவர்களுக்கு அன்பு அறக்கட்டளை சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.