மயிலாடுதுறை, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை, சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினர் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், போராட்டம் நடத்துவதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய கூலி தொழிலாளிக்கு நிவாரணமாக 15 ஆயிரம் வழங்க வேண்டும் என் கோரிக்கைகளை வைத்தனர். மேலும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்ற வலியறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.