குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்


தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கண்டித்ததால் மாணவ, மாணவிகள் தற்கொலை என்னும் செய்திகள் அடிக்கடி வருகின்றன. சமீபத்தில் வேலூர் மாவட்டம் பணப்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்து வந்த நான்கு மாணவிகளை ஆசிரியர்ள் கண்டித்ததாலும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும் என்றும் கூறியதாலும் பயந்து போன அந்த மாணவிகள் 60 அடி ஆழ கிணறற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதே போல சென்னை செம்மஞ்சேரி தனியார் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படித்து வந்த ஐதராபாத் பகுதியை சேர்ந்த ராஜா ரெட்டி மகள் மவுனிகா என்பவர் பேராசிரியர் கண்டித்ததால் விடுதி அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு அக்கல்லூரியே பற்றி எறிந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் அடுத்தடுத்து நடைபெற்றதால் கல்வித் துறையிலும், பெற்றோர்களிடத்திலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எதையும் தாங்கிகொள்ளும் திறனற்ற மாணவ சமுதாயம் உள்ளதையே இது உணர்த்துகிறது. மேலும் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவையே பெற்றோர்கள் தேர்வு செய்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். பெற்றோர்களின் ஆசைக்கு ஏற்ப பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதால் விருப்பமில்லாமல் பயிலும் பொது காப்பி அடித்தாவது தேர்ச்சி பெற வேண்டும் என்ற என்னம் மேலோங்கி தவறு செய்ய தயாராகிறார்கள். தவறிழைக்கும் மாணவர்களை ஆசிரியர் எப்படி கண்டிக்காமல் இருக்க முடியும். கண்டிப்பால் பாதிக்கப்பட்டு மனம் திருந்தாமல் மனம் உடைந்து தற்கொலை முடிவுக்கு செல்வதை தடுக்க தினமும் அவர்களுடனேயே பழகும் ஆசிரியர்கள், மாணவர்களின் மனம் குணம் அறிந்து பக்குவமாக சொல்லி திருத்துகின்ற முறச்சியில் இனியாவது நடந்து கொண்டால் இது போன்ற துயர சம்பவங்கள் ஏற்படாது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை திடம் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும்.