26th February 2021

மயிலாடுதுறையில் பசுமைத் தாயகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம்.

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பேராபத்தை தடுக்கவும் அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் காலநிலை அவசரநிலை பிரகடனம் ஏற்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் பசுமைத் தாயகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே ஏ.வி.சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பா.ம.க மாநில துணை பொது செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்து கல்லூரி மாணவர்களுக்கு பசுமைத் தாயகம் சார்பில் தயாரிக்கப்பட்டிருந்த காலநிலை அவசரநிலை பிரகடனம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் வழிகாட்டுதலின்படி பசுமைத் தாயகம் மற்றும் பா.ம.க-வினர் அனைத்துப் பகுதி மக்களுக்கும் முழுமையாக இந்த விழிப்புணர்வு சென்றடைய பணியாற்றுவோம் என்று உறுதியேற்றுக் கொண்டனர். இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply