26th October 2021

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 15 நபர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 21 லட்சம் 12 ஆயிரத்து 500 மற்றும் ஓய்வூதிய தொகை ரூ.60 ஆயிரத்து 60 வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார்.

முன்னதாக வன்கொடுமை தொடர்பான விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்காணிப்புக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணு, கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், சுரேஷ்குமார், வினோத், மாயகிருஷ்ணன், தனுஷ்கோடி, ராமதாஸ், கார்த்திகேயன், வெங்கட்ராமன், நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page