25th September 2021

மயிலாடுதுறை சித்தர்காடு ஊராட்சியில் கிராம காவல்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சியில் கிராம விழிப்புணர்வு காவல் குழு சார்பாக சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவேல் தலைமையில் நடைபெற்றது இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஆனந்த கண்ணன் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்

இது செல்போன் மூலமாக நடக்கக்கூடிய சைபர் கிரைம் குற்றங்கள் ஓடிபி மூலமாகவோ அல்லது பிற வகையிலும் மோசடியாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டால் உடனே பொதுமக்கள் மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் இலவச எண்ணான 155 220 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் அந்த வங்கிக் கணக்கு முடக்கப்படும் .

அதைத் தொடர்ந்து விசாரணையை எடுத்துக்கொள்ளப்படும் மேலும் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் தங்கள் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பணம் கேட்டு ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து www.cybercrime.gov in என்ற இணையதளத்தை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொதுமக்களிடம் விளக்கிக் கூறினர் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கேட்டுக் கொண்டனர்

 

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page