3rd December 2020

விஜய தசமி, ஆயுத பூஜை செய்யும் முறைகள் மற்றும் நல்ல நேரம்

துர்கா தேவிக்கு மரியாதை செய்யும் வகையில் இந்தியாவில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுகிறார்கள், இந்த ஒன்பது நாட்களில் துர்கா தேவியை போற்றும் வகையில் துர்கா தேவியை ஒன்பது வகையான வடிவங்களில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது, நவராத்திரியின் ஒன்பதாவது நாள் மகா நவமி என கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஆயுத பூஜையை விமர்சையாககொண்டாடப்படுகிறது, நவராத்திரி விழாவிற்கும் ஆயுத பூஜை விழாவிற்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

மகாபாரதத்தின்படி பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனனை நாடு கடத்தப்பட்ட போது அவரது ஆயுதங்களை வன்னி மரத்தின் அடியில் மறைத்து வைத்ததாகவும் வனவாசம் முடிந்து வந்த போது அந்த ஆயுதம் வைத்த இடத்தில் பத்திரமாக இருந்ததை கண்டு வன்னி மரத்தினை வணங்கி அந்த ஆயுதங்களை கொண்டு குருசேஷத்திரப் போரில் வெற்றி பெற்று விஜயதசமி நாளில் திரும்ப வந்து வன்னி மரத்தினை வணங்கினார்கள் இதனால் விஜயதசமியை சிறப்பாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது,

புராணங்களில் மகஹிஷாசுரா என்ற அரக்க ராஜாவை அஷ்டமி நவமியில் வதம் செய்து கொன்ற நாள் என்பதால் அந்த நாளை ஆயுத பூஜை என்று கொண்டாடபடுவதாக கூறப்படுகிறது.

நம் முன்னோர்கள் ஆயுதங்களுக்கு மரியாதை செய்து வணங்கும் விழாவாகவே ஆயுத பூஜையை கொண்டாடி வந்துள்ளனர். காலப்போக்கில் வியாபார நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றையும் சுத்தம் செய்து பூஜை போட்டு வணங்க துவங்கினர்.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை:

அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் கருவிகள் (கத்தி, பாத்திங்கள் சில) வீடு, வண்டி வாகனம் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்து பூ மற்றும் பொட்டு வைக்க வேண்டும்.
வாசலில் கோலமிட்டு, மா இலை தோரணங்கள் கட்ட வேண்டும்.
பூஜை அறை மற்றும் சாமி படங்கள் போன்றவற்றை சுத்தம் செய்து பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.
சுத்தம் செய்த கருவிகள், பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பண பெட்டிகள், வரவு செலவு கணக்கு நோட்டுகள் ஆகிவற்றை சந்தணம் தெளித்து குங்குமம் வைத்து சாமி படம் முன்பு வைக்க வேண்டும்.
பூஜை அறையில் குத்துவிளக்கேற்றி பூஜை பொருட்கள் தேங்காய், வாழைப் பழம், எழுமிச்சை, விபூதி, குங்குமம், கற்பூரம், வெற்றிலை பாக்கு, அவல், சுண்டல், பொறி கடலை, பிற பழங்கள் வைத்து அனைவரும் பூ போட்டு பூஜை செய்து வழிபட வேண்டும்.
பூஜை முடியும் வரை பூஜையில் வைத்த பொருட்களை எடுக்க கூடாது

ஆயுத பூஜை செய்ய வேண்டிய நல்ல நேரம்:

ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜை (அக்.25)

நல்ல நேரம் : காலை 6.00 முதல் 7.42 வரை, 10.30 முதல் 12.00 வரை

பிற்பகல் 2.15 4.25

இரவு 9.15-12.15

விஜய தசமி திங்கட்கிழமை

நல்ல நேரம் காலை 6.00 முதல் 7.30 வரை

 

 

SOURCE

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts