26th November 2020

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கலைக்க தமிழக அரசுக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தமிழக காவல்துறையின் ஒரு அங்கமாக திகழும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பொதுமக்களின் நலன் கருதி கலைக்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

காவல்துறைக்கு உதவுவதற்கும் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் ஒரு பாலமாக இருப்பதற்கும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் தற்போது நாளுக்கு நாள் சிதைக்கப்பட்டு வருகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சேர்ந்த நபர்களுடைய அத்து மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் கண்ணியமிக்க காவல்துறைக்கு கடும் கெட்டபெயர் ஏற்படுகிறது .

வருடம் முழுவதும் குடும்பத்தை மறந்து, சுக துக்கங்களில் பங்கேற்ற இயலாமல் மக்கள் பணியாற்றி வருகிற காவல்துறைக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒரு கருப்பு மை. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்களால் தனிநபர் வாழ்வு சிதைக்கப்படுகிறது. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்கள் தங்களை காவலர்களாகவே மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொண்டு பல்வேறு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக காவல்துறைக்கு களங்கத்தை விளைவித்து வருகிறார்கள். இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலருடன் இவர்கள் சென்று தூக்கம் இழந்து காவலர்கள் உரிய முறையான முழு பயிற்சியின்றி வலம் வந்து பகலில் உறங்கும் நிலை தவிர்க்க இயலாத ஒன்றாகி தனி தனி மனித வாழ்வில் ஏற்றம் இன்றி வாழும் நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய குடும்பத்திற்கும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த அமைப்பின் நபர்கள் தங்களை காவலர்களாக சித்தரித்து கொள்கிறார்கள். அவ்வாறு சித்தரித்துக் கொண்டு மக்களை அச்சுறுத்தும் அவதூறு நிலைக்கு தங்களை உருவகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் .
காவல் துறைக்கான இடைத்தரகர்களாகவும் மாற்றிக்கொண்டு காவல்துறை பெயரைச் சொல்லி கையூட்டு பெற்று வருகிறார்கள் . காவல் நிலைய செயல்பாடுகளில் அவர்கள் தலையீடு மிக அதிகமாக இருக்கிறது. காவல் நிலைய விசாரணை செயல்பாடுகளில் உடனிருந்து சட்டபூர்வமான அத்துமீறல்களை செய்கிறார்கள். காவல்துறையின் நடைமுறை மற்றும் ரகசிய செயல்பாடுகளை வெளியில் கசிவதற்கு காரணமாக இருக்கிறார்கள். மேலும் காவல் நிலைய ஆவணங்களை கையாளும் சட்டவிரோத செயலையும் செய்கிறார்கள். காவலர்களின் மறு உருவமாகவே தங்களை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.

காவலர்களைப்போல் அங்கீகரிக்கப்பட்ட தடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத தடிகளை கையில் வைத்துக்கொண்டு அத்துமீறி சட்டவிரோதமாக பயன்படுத்தி சமூகத்தை அச்சமூட்டி வருகிறார்கள். பல இடங்களில் அத்துமீறி வாக்கி டாக்கி தன்வசம் வைத்துக்கொண்டு அதனை பயன்படுத்துகிறார்கள். மேலும் பொதுமக்களை அவமதிப்பது, எடுத்தெறிந்து பேசுவது , மரியாதை குறைவாக நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டு வருகிறார்கள். பொதுவெளியில் கையில் தடியை வைத்துக்கொண்டு மக்களை தடியால் அடிப்பது, அவர்கள் கடும் சொற்களால் அழைப்பதும், திட்டுவதும் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை மாற்றி காவல்துறை பொதுமக்களின் எதிரியாக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மாற்றி வருகிறார்கள். இந்த அமைப்பின் சட்ட விரோத செயல்பாடுகளால் ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக வர்ணிக்கப்பட்ட தமிழக போலீஸ் தற்பொழுது தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் வில்லன் ரேஞ்சுக்கு மக்கள் மனதிலே விதைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை சார்ந்த நபர்களின் சட்டவிரோத செயல்கள் ஆகும். காவல்துறையின் தியாகங்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நபர்களால் மக்கள் மத்தியில் எடுபடாமல் போகிறது . தங்களை காவல் அதிகாரிகளாக பாவித்து கொண்டு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக ஊரடங்கு காலத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செய்த அட்டூழியங்களை பட்டியலிட முடியாத அளவிற்கு செய்திருக்கிறார்கள். வாகனங்களில் செல்வோரை தடியால் நிறுத்துவதும், வாகனங்களில் செல்லும்போது தடியால் அடிப்பதும், தோப்புக்கரணம் போடச் சொல்வதும் போன்ற சட்ட விரோத செயல்களை தொடர்ந்து பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் செய்து வருகிறார்கள். ஆகவே தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை கலைத்து காவல்துறைக்கு கூடுதலான நபர்களை நியமனம் செய்து சட்டம் ஒழுங்கையும், மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

Leave a Reply