கல்வி கடன் பெற நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டாம் பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் மூலம் விண்ணப்பிக்கலாம்

பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்டப்படிப்புகளின் கல்வி கடனுக்கு பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் எனும் இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்வி கடன்களுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்வி கடன்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழிகாட்டுதல்களை பிப்ரவரி 21ம் தேதியன்று அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மத்திய நிதி அமைச்சகம் தெரியப்படுத்தியுள்ளது. அனைத்து கல்வி கடன்களுக்கான விண்ணப்பங்களையும் பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது. ஆகையால் 12ம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை, எளிய மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெற வங்கிகளை அணுக தேவையில்லை.

பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம் என்ற இணையதளத்தில் சென்று அதிலுள்ள கல்வி கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்வி கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலிக்கப்பட்டு கல்வி கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும்.

source

Advertisement

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

Leave a Reply