சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் ஒப்புதல் வழங்கியுள்ளது – மத்திய நிதியமைச்சகம்


அவசரகால கடனுதவித் திட்டத்தின் கீழ் சுமார் 44 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு, கடனளிக்க வங்கிகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், கடந்த 21ந் தேதி நிலவரப்படி, 44 லட்சத்து 20 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சுமார் 1 லட்சத்து 77 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க, பொதுத்துறை, தனியார் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஒப்புதல் வழங்கியுள்ளன என குறிப்பிடப்பட்டு உள்ளது.அதில், சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.