25th September 2021

பி.இ வகுப்புகள் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் தொடக்கம் – அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தனது தீவிரவாத தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பி.இ, பி.டேக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18-ஆம் தேதி தொடங்கும் என்றும், டிசம்பர் 2-ம் தேதி செய்முறை தேர்வு நடைபெறும் என்றும், டிசம்பர் 13-ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த தேர்வுகள் நிறைவடைந்த பின் அடுத்த ஆண்டுக்கான செமஸ்டர் வகுப்புகள் 2022, ஜனவரி -19-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொறியியல் வகுப்புகள் நடைபெற வேண்டும் என அண்ணா பலக்லைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page