மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் : விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ‘பாரத் பந்த்’

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா முழுவதும் இன்று நடைபெறும் பாரத் பந்த்தையொட்டி மயிலாடுதுறையில் அனைத்து விவசாய சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

வேளாண் திருத்தச்சட்டம் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் உள்ளதாக குற்றம் சாட்டி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று இந்தியா முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே வேளாண் சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெறக் கோரி அனைத்து விவசாய சங்கத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மத்தியஅரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பாரத் பந்தை ஒட்டி மயிலாடுதுறையில் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டுள்ளது மற்றும் கார், வேன் ஆட்டோ ஆகிய வாகனங்கள் இயங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

More News

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts