ரூ.2000 கோடி மதிப்பீட்டிலானா பாரத் நெட் திட்டத்தைநிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்


கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு இரண்டாம் முறையாக அறிவுறுத்தியுள்ளது. கிராமங்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் பாரத் நெட் திட்டத்தை ரூ.2000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன்முலம் 12524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்ட ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்குமாறு 2-வது முறையாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளத்தது. மேலும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக செயல் பட்டுவந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய வர்த்தக துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மேக்கிங் இந்திய திட்டத்தின் தொடர்பான விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் கூறியுள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்று தனது புகாரை பதிவு செய்யும் வரை ஒப்பந்தத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது. ஒப்பந்தங்களை மேற்கொண்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.