ரேஷன் கடைகளில் ஒன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் முறை- குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும்

தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்க சென்றால் ஸ்மார்ட் கார்டில் உள்ள பார்கோர்ட்டை கடை ஊழியரிடம் உள்ள பாயிண்ட் ஆப் சேல் மிஷினில் ஸ்கேன் செய்யப்படும்.

தேவையான பொருட்கள் வழங்கப்படும். இந்த நடைமுறையின் மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் மட்டுமின்றி வீட்டில் வேலை செய்பவர், தெரிந்தவர்கள் என யாரும் வந்து கார்டை காட்டி பொருட்களை வாங்க முடியும். இதில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதை தடுக்கும் வகையில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் விரல் ரேகையை பதிவு செய்து மட்டுமே, பொருட்களை வாங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

இதன்மூலம், ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலை உருவாகும். இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சென்னை தெற்கு துணை ஆணையர் பெர்சி சாமுவேல் சென்னை உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கைரேகை பதிவின் மூலம் வழங்குவதற்கு பழைய விற்பனை முனைய இயந்திரத்தை மாற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் வரும் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய 2 நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றி புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. எனவே, அந்த நாட்களில் பொருட்கள் வாங்க முடியாத குடும்ப அட்டைதாரர்கள் இன்றும் நாளையும் (செப்.28, 29) பொருட்கள் பெற்று செல்லலாம்.

புதிய விற்பனை முனையை இயந்திரத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் ஒரு வேளை விற்பனை முனைய இயந்திரத்தை அலட்சியமாக, தவறாக கையாளுதல் அல்லது சேதப்படுத்தினால் அதனை சரி செய்ய அல்லது மாற்றி வழங்குவதற்கான தொகை, சம்பந்தப்பட்ட நியாய விலை கடை விற்பனையாளரே செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கடந்த 25,26 ஆகிய தேதிகளில் புதிய விற்பனை முனைய இயந்திரம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை பெற முடியும்.

SOURCE

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page