27th November 2020

மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள் விழா.

மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், பிரதாப முதலியார் சரித்திரம் எனும் முதல் தமிழ் நாவலை எழுதிய மாயூரம் கவிஞர் வேதநாயகம் பிள்ளை அவர்களின் 193-வது பிறந்தநாள் விழா இன்று (11/10/2019) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

விழவிற்கு மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஜெனிபர் ச.பவுல்ராஜ் அவர்கள் தலைமை வகித்தார், சிறப்புத் தலைவர் சு.சிவலிங்கம் முன்னிலை வகித்தார், தருமை ஆதினக் கலைக்கல்லூரி பேராசிரியை பா.முத்துலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் பேராசிரியர்கள் வன்மீக வெங்கடாசலம், துரை.குணசேகர், திருக்குறள் பேரவையின் தலைவர் முனைவர் சு.சிவசங்கரன், வரலாற்றுப் புதின எழுத்தாளர் திருமதி. மலர்விழிகலியபெருமாள், ஏ.வி.சி கல்லூரியின் தமிழாய்வுத்துறை தலைவர் சு. தமிழ்வேலு, உலக தமிழ்க் கழக தலைவர். சிவ.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கவிஞர் வேதநாயகம் பிள்ளை அவர்களை போற்றி புகழுரையாற்றினார்கள்.

கவிஞர் விமலா நாகேஷ் கவிதை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாயூரம் கவிஞர் வேநாயகம் பிள்ளை அவர்களின் பெயரன் கடலூர் வழக்கறிஞர் பிரதீப் வேதநாயகம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. கவிஞர் வேதநாயகம் பிள்ளை அவர்களின் சம்மந்தி டி.ஆர். பால்இருதயராஜ் அவர்களின் வாழ்த்து செய்தியினை இள.மதுராந்தகன் வாசித்தார். நிகழ்ச்சிகளை க.சிவசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். கவிஞர் கடலூர் பாலா வரவேற்றார். பொள்ளாச்சி கவிஞர் இன்பரசு நன்றி கூறினார். முன்னதாக கவிஞர் வேதநாயகம் பிள்ளை அவர்களின் நினைவிடத்தில் உள்ள, அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

1 thought on “மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள் விழா.

Leave a Reply