பாஜக அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய பாஜக அரசின் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் கடலங்குடி ஊராட்சி மன்ற விசிக தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திட்ட சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் 11 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மத்திய அரசை கண்டித்தும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக பொறுப்பாளர்கள் சீசர், பாரதிவளவன், சீர்காழி ராஜ்குமார், செம்பனார்கோயில் கலைவண்ணன், குத்தாலம் சஞ்சீவி, சிவகுமார், வினோத் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.