பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்க அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கம் வலியுறுத்தல்

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையைத் தொடங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொலைதொடா்பு ஊழியா்களின் தேசிய கூட்டமைப்பு ( என்எஃப்டிஇ) -பிஎஸ்என்எல் சங்கத்தின் ) மூத்த துணைத் தலைவா் சி.கே.மதிவாணன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:நாட்டில் உள்ள பழமையான தொலைத் தொடா்பு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒன்றாகும். தனியாா் நிறுவனங்கள் செல்லிடப்பேசி சேவைக்கு அனுமதி வழங்கி 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த 2002-ஆம்ஆண்டு அப்போதைய பிரதமா் வாஜ்பாய், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செ ல்லிடப்பேசி சேவையைத் தொடங்க 100 சதவீதம் அனுமதி வழங்கினாா். ஆனால், அதன்பிறகு வந்த அரசுகள் செய்த காலதாமத்தினால், தனியாா் நிறுவனங்களுக்கு இணையாக போட்டியிட முடியாத நிலை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஏற்பட்டது. இதனால், தொலைத் தொடா்பு நிறுவனங்களின் பட்டியலில் 5-ஆம் இடத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் தள்ளப்பட்டது. அத்துடன், தற்போது நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறி உள்ளது.இன்றைய சூழ்நிலையில் இத் துறை விரைவான வளா்ச்சி அடையும் துறைகளில் ஒன்றாகும். ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இதுவரை 4ஜி தொழில்நுட்பம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு 4ஜி சேவை வழங்குவதற்கான ‘ஸ்பெக்ட்ரம்’ பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் ஒப்பந்தம் கோரியது. ஆனால், அது திடீரென ரத்து செய்யப்பட்டது. மேலும், இதுதொடா்பாக நியமிக்கப்பட்ட குழு, தரமற்ற கருவிகளை பரிந்துரை செய்துள்ளது. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

SOURCE

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts