மயிலாடுதுறை சீர்காழி கொள்ளிடம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள 6000 தொகுப்ப வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தர கோரி மனு


மயிலாடுதுறை சீர்காழி கொள்ளிடம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள 6000 தொகுப்ப வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதி சார்ந்த சமூக ஆர்வலர்கள் சக்திவேல், வக்கீல் ரவி மற்றும் முஹம்மது ரஃபிக் ஆகியோர் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொண்டிருந்த மயிலாடுதுறை ஆர்.டி.ஓ மகாராணி, நேர்முக ஆய்வாளர் மலர்விழி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கொள்ளிடம் ஊராட்சியில் மனுவில் 42 ஊராட்சிகளில் 1992 ம் ஆண்டு முதல் 1998 வரை ஏழை எளிய வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசு கான்கீரிட் திட்டத்தின் கீழ் சுமார் 6000 வீடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர்களுக்கு பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடு கட்டும் ஆகிய அரசு வீடு கடும் திட்டத்தின் கீழ் புதிதாக அரசு வீடு காட்டித்தர நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கை மனுவை பெற்று கொண்ட ஆர்.டி.ஓ இது குறித்து ஆய்வு செய்து புதிய கான்கிரீட் வீடுகள் கட்டத்தரவேண்டும் என தெரிவித்தார்.