குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை – குறிஞ்சி என். சிவக்குமார்..!

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குறிஞ்சி என். சிவகுமார் அவர்களைத் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆணையிட்டார்.

இந்நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் குறிஞ்சி என். சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

“50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் முதல்வர் அவர்கள் எப்படி தமிழக அரசை வெளிப்படை தன்மையுடன் நடத்துகிறாரோ,அதேப்போன்று அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும். மேலும்,மக்களுக்கு எளிய முறையில் மிகக் குறைந்த விலையில் கேபிள் டிவி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்தார்.

ஈரோட்டைச் சேர்ந்த குறிஞ்சி திரு என்.சிவகுமார் அவர்கள் கட்டுமானப் பொறியாளர் ஆவார். இவர் ஏற்கனவே ஈரோடு மாவட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவராகவும், தமிழ்நாடு கேபிள் டிவி மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் சங்க மாநில துணைத் தலைவராகவும் உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஈரோடு மாவட்டத்தின் அரிமா சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து, பல்வேறு சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: தினச்சுவடு

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page