24th November 2020

கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்த தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி கடும் கண்டனம்

மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும். அது போல இந்த ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நமது உயிரினும் மேலான தலைவர் கழகத் தலைவர் தளபதி அவர்கள் ஒவ்வொரு கிராம சபைக் கூட்டத்திலும் 3 வேளாண்மை சட்டங்களை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா திமுகவை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள ஊராட்சிகளிலும் கூட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு கிராம மக்கள் தயாராக இருந்த பொழுது , கொரோனாா வைரஸ் பரவலை காரணம்காட்டி ,
கிராம சபை கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது.

கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது மாபெரும் ஜனநாயக படுகொலை ஆகும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என காந்தி தெரிவித்த கருத்துக்கு முரணாக தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கிராமசபை கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றம் கூட அந்த தீர்மானத்தை தன்னுடைய கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு கிராமசபை கூட்டங்கள் உடைய தீர்மானங்களுக்கு சட்ட வலு உண்டு. அந்த சிறப்பு வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கிராமசபை கூட்டங்களை எதிர்கொள்ள முடியாத எடப்பாடி அரசு தற்போது ஜனநாயகப் படுகொலையை கிராம சபை கூட்டத்தை ரத்து செய்வதன் மூலம் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறது. இந்த ஜனநாயகப் படுகொலையை மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. தொடர்ந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க கூடிய வேலையை தமிழக அரசு செய்து வருகிறது. அதற்கு மத்திய அரசும் துணை போகிறது.

கிராம ராஜ்ஜியத்தை ஒழிப்பதற்காகவே கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. கிராமசபை கூட்டத்தில் வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு மத்திய அரசிடம் என்ன பதில் சொல்ல முடியும் என பயந்து, எடப்பாடி அரசு கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துள்ளது. ரத்து செய்த கூட்டத்தை வேறு ஒரு தேதியில் நடத்துவதற்கு தமிழக அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts