சீர்காழியில் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை சார் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை வாங்குவதற்கு மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை மீன்துறை சார் ஆய்வாளர் பரிந்துரை செய்வார். பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இதனை மீனவர்கள் பெற்று பயனடைவர்.

இந்நிலையில் சீர்காழி மீன்துறை அலுவலகத்தில் சார் ஆய்வாளராக பணியாற்றும் சங்கர், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் கடன் அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு அட்டை ஒன்றுக்கு ரூபாய் 100 லஞ்சம் கேட்பதாகவும், கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 500 பேர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உள்ளதாகவும், நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடன் அட்டை வழங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 162ம் அதற்கு உண்டான லஞ்ச தொகை 18,080 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

கடன் அட்டை வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மீன்துறை சார் ஆய்வாளர் சங்கர் மீது நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SOURCE

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts

Leave a Reply