24th November 2020

கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத 11,200- ரூ.4 கோடி பறிமுதல் செய்த சிபிசிஐடி போலீஸ்

விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில், விவசாயிகள் என்று கூறி மோசடி செய்தவர்களிடன் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதித்திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், 3 தவணைகளாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில், விவசாயிகள் என்று கூறி போலியாக 42 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் 8 ஆயிரம் பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மோசடியாக சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் உள்ள தொகை திரும்ப பெறப்பட்டு அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 ஆயிரத்து 200 பேரின் வங்கி கணக்குகளில் இருந்து, தலா 4 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், 4 கோடியே 48 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SOURCE

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

Leave a Reply