பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவைக் கூட்டம்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடியவுள்ள நிலையில், டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.