செம்பனார்கோவிலில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது


மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நேற்று(19.02.2021) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தலைமை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். பவுன்ராஜ், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக அவைத் தலைவரும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.பாரதி, மயிலாடுதுறை நகர கூட்டுறவு சங்க தலைவர் வி.ஜி.கே. செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல அலுவலர் பரமேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட செம்பனார்கோவில், மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களை சேர்ந்த 1779 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கினார்.