மயிலாடுதுறை அருகே சுருக்குமடிவலைக்கு அனுமதி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாடி மீனவர்கள் திடீரென்று கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தில் சுருக்குமடி வலையை பயன் படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்க கோரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தை கைவிட மறுத்த மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலினுள் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியபோது மயங்கி விழுந்த பெண்ணை அங்கிருந்து மீனவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் மீனவர்கள் கடலிலிருந்து கரைக்கு வந்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தியதால் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.a

Advertisement

 

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page