தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து தப்பித்த சென்னை


17 ஆண்டுகளுக்கு பிறகு பாதி கொள்ளளவை எட்டிய ஏரிகள்ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்பட்ட 8.2 டி.எம்.சி, கிருஷ்ணா நதி நீராலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீராலும் சென்னையின் நீராதாரமாக விளங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் பாதியை எட்டியுள்ளன.
வழக்கமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஜூலை மாதத்தில் இந்தளவு நீர் இருப்பை 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு எட்டியுள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 94 மில்லியன் கன அடி நீர் உள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 71 மில்லியன் கன அடி உள்ளது.
இந்தாண்டுக்கான கிருஷ்ணா நதி நீர் பகிர்வை ஆந்திரா விரைவில் வழங்க உள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையின் குடிநீர் தேவைக்காக ஒரு நாளைக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்க வேண்டிய நிலையில், தற்போதைய நீர் இருப்பை கொண்டு 700 மில்லியன் தண்ணீர் விநியோகிக்க பட்டு வருவதகாவும், இந்தாண்டு டிசம்பர் வரை தட்டுப்பாடு இன்று மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.