சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை மெட்ரோ ரயில் கட்டணங்களை குறைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2 கிலோமீட்டர் வரை 10 ரூபாய் கட்டணம் என்பதில் மாற்றமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 முதல் 4 கிலோமீட்டர் வரை 20 ரூபாய் கட்டணம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அந்த கட்டணத்தில் 5 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம்.

4 முதல் 6 கிலோமீட்டர் வரை 30 ரூபாயும், 6 முதல் 12 கிலோமீட்டர் வரை 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 30 ரூபாய் கட்டணத்தில் 12 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம். 12 முதல் 18 கிலோமீட்டர் வரை 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 21 கிலோமீட்டர் வரை 40 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம்.

18 முதல் 24 கிலோமீட்டர் வரை 60 ரூபாய் கட்டணமும், 24 கிலோமீட்டருக்கு மேல் 70 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 32 கிலோமீட்டர் வரை 50 ரூபாய் கட்டணத்திலேயே பயணிக்கலாம். கியூ.ஆர்.கோடு மற்றும் தொடுதல் இல்லா மதிப்புக் கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம், வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான வழித்தடத்திற்கும் சேர்த்து அதே 100 ரூபாயாகவே இருக்கும்.

இதேபோல ஒரு மாத வரையறுக்கப்படாத கட்டணம் கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து 2500 ரூபாய் ஆகவே நீடிக்கும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இந்த கட்டணக் குறைப்பு வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

More News

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts