நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள்தான்: ராமர் கோயிலுக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்த சென்னை முஸ்லிம் தொழிலதிபர்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ராமர் கோயிலுக்கு தினக்கூலிகள் முதல் பிச்சைக்காரர்கள் உட்பட பலதரப்பட்டோரும் நன்கொடை அளிக்கின்றனர். பல மதத்தினரும் பங்களிப்புச் செய்து வருகின்றனர், இதில் சென்னையைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகரும் ராமர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான டபிள்யு. எஸ். ஹபீப் என்பவர் ₹1,00,008-க்கான காசோலையை ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா தொண்டர்கள் வந்து கேட்டவுடன் கொடுத்துள்ளார்.

“முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்குமிடையே ஒற்றுமையை வளர்க்க நான் ராமர் கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளேன். நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்தான் இந்த நம்பிக்கையுடன் தான் நான் நன்கொடை அளித்தேன்” என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கப்படுவதை நினைத்து தான் வருந்துவதாக அவர் தெரிவித்தார். மேலும் வேறு எந்த கோயிலுக்கும் நான் கொடுத்திருப்பேனா என்று தெரியாது, ஆனால் ராமர் கோயிலுக்காக கொடுத்திருக்கிறேன், காரணம் பல ஆண்டு கால பிரச்சினை முடிவுக்கு வந்ததல்லவா என்றார்.

இந்து முன்னணியும் ராமர் கோயில் வசூல் திருப்பணியில் இணைந்துள்ளது.இந்து முன்னணியின் சென்னை தலைவர் ஏ.டி.இளங்கோவன் பிடிஐக்குக் கூறும்போது, “யாரை அணுகினாலும் விருப்பமாகவே நன்கொடை அளிக்கின்றனர். நாங்கள் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு நபர் ரூ.50,000 கொடுத்தார். ராமபக்தர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பிரிவான தர்ம ஜாக்ரன் மன்ச் சென்னை ஒருங்கிணைப்பாளர் கே.இ.ஸ்ரீநிவாசன் கூறும்போது, பெரம்பூரில் தினக்கூலிகள் ரூ.10 என்று நன்கொடை அளிக்கின்றனர். கொடுங்கையூரில் கடை வைத்திருப்பவர்கள் நன்கொடை அளித்தனர்.

கோயில் அருகே குங்குமம் விற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் ஒருவர் மனமுவந்து ரூ.200 நன்கொடை அளித்தார், என்றார்.

காஞ்சி காமகோடி பீடம் ஏற்கெனவே அனைவரும் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வைத்தது.

பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 5, 2020-ல் அயோத்தி ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார்.

Source: News18 Tamilnadu

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts