17th April 2021

மேற்கு வங்க மாநிலத்தில் ஆக. 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு வாரத்தில் 2 நாள் முழு அடைப்பு முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அதேநேரம் வாரத்தில் 2 நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படும். அதாவது ஆகஸ்ட் 2, 5, 8, 9, 16, 17, 23, 24, 31 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அன்று ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட மாட்டாது.

பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடியே இருக்கும். பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து செப்டம்பரில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினம், பக்ரீத் பண்டிகைகள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. எனவே அன்றைய தினங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்காது. இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

source

Advertisement

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts

Leave a Reply