3rd December 2020

முதல்வர் பழனிசாமியின் தாயார் உடல் தகனம்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவரது உடல் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.

காலை 8 மணியளவில் சிலுவம்பாளையம் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட தவுசாயம்மாளின் உடல், அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில், முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், கட்சியினர், கிராம மக்கள் என திரளானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவுசாயம்மாள், தமிழக முதல்வரின் தாயாரான இவர், உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை (அக்.13) அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள சிலுவம்பாளையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து சொந்த கிராமம் வந்தடைந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தாயார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

அமைச்சர்கள் செங்கோட்டையன், அன்பழகன், தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கருப்பணன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக சட்டம் – ஒழுங்கு கூடுதல் ஏடிஜிபி ராஜேஷ் தாஸ் அஞ்சலி செலுத்தினார்.

SOURCE

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts