மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதியில் கலெக்டர் அலுவலகம் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்


நாகை மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான நவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள மூங்கில் தோட்டத்தில் தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 33 ஏக்கர் நிலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கலெக்டர் அலுவலகம் கட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அளவிட்டு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பல வருடங்களாக குடியிருந்து வரும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் பல வருடங்களாக குடியிருந்து வருகிறோம்.இங்கு கலெக்டர் அலுவலகம் கட்டக்கூடாது என கூறி நேற்று காலை அப்பகுதியில் ஆண்கள்-பெண்கள் என 100 க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் . இதுபற்றி தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சிங்காரவேல், தாசில்தார் முருகேசன், மற்றும் வருவாய்துறையினர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர் .ஆனால் அதில் உடனடியாக எந்த சமசரசமும் ஏற்படாததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு களைந்து செல்லவில்லை இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .