மாநில கபடி போட்டியில் சிறப்பிடம் பெற்ற மயிலாடுதுறை அணிக்குப் பாராட்டு


முதுகளத்தூரில் நடைபெற்ற மாநில இளையோர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அணிக்கு பாராட்டத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் ராமநாதபுரம் அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 47 ஆவது மாநில இளையோர் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி முதுகளத்தூரில் பிப்ரவரி 19,20 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 38 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட அணி வீரர்கள் மூன்றாம் இடம் பெற்றனர்.
இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட அணி வீரர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூர் கபடி கழக பொறுப்பாளர் மா. ரஜினி மற்றும் நிர்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், பயிற்சி அளித்த ஆசைத்தம்பி, வானகிரி பி.எஸ்.ரவி, சசிகுமார், வெற்றி, ரவிபாலன், நீலகண்டன், காசி கார்த்திகேயன் ஆகியோருக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.