26th November 2020

திருச்சியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், கொரோனா விழிப்புணர்வு மராத்தான் இன்று நடைபெற்றது.திருச்சி, கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்திலிருந்து இருந்து, மூத்த தீயணைப்பு வீரர் சகாயராஜ், மராத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.இந்த மாரத்தான் ஓட்டம் பீமநகர், பாரதி தாசன் சாலை, தலைமை அஞ்சலகம் வழியாக டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டரங்கம் வரை நடைபெற்றது. இதில் தீயணைப்புத் துறை சார்ந்த வீரர்கள், தன்னார்வ இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சமூக இடைவெளி, முகக்கவசம், கையுறைகள் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு, திரவங்கள், கிருமி நாசினிகள் மூலம் சுத்தம் செய்வது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை வலியுறுத்தும் வகையில்,மாரத்தான் ஓட்டத்தின் போது வீரர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.நிகழ்வில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன் , நிலைய அலுவலர் மெல்கி ராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts