18th October 2021

கொரோனா பாதிப்பு: மின்மயானத்துக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும் கே.வி. ஆனந்த் உடல்

இன்று காலை மறைந்த கே.வி. ஆனந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக ஆரம்பத்தில் பணியாற்றிய கே.வி. ஆனந்த், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாளப் படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். காதல் தேசம் படம் மூலமாகத் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 54.

கே.வி. ஆனந்தின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 24-ம் தேதி தொண்ட வலியும் உடல்சோர்வும் கே.வி. ஆனந்துக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் கரோனா தொற்று அவருக்கு உறுதியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கரோனாவுக்காக மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதையடுத்து கே.வி. ஆனந்தின் மனைவி, இரு மகள்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்கள். பிறகு மூவரும் கரோனா தொற்றிலிருந்து மீண்டார்கள். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதால் கே.வி. ஆனந்தின் உடல் அவருடைய வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

கே.வி. ஆனந்தின் உடல் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. 5 நிமிடங்கள் மட்டுமே இல்லத்தின் முன்பு ஆம்புலன்ஸ் வாகனம் நின்றது. ஆம்புலன்ஸின் உள்ளே இருந்த கே.வி. ஆனந்தின் உடலுக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு கே.வி. ஆனந்தின் உடல் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page